Skip to main content

The miracle! Ajith Kumar and his fans

திரு. கணேசன் அன்பு என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்குமாரும் அவரது ரசிகர்களும் - நிகழ்ந்த அற்புதம்! என்ற தலைப்பில் ஒரு கருத்தை,  உள்ளது உள்ளபடி பதிவிட்டிருந்தார் . அது உங்கள் பார்வைக்காக.

அஜித்குமாரும் அவரது ரசிகர்களும் - நிகழ்ந்த அற்புதம்!

 அஜித்குமார் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் (நல்ல) சினிமா விரும்பிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான விளக்க பதிவு.
எங்களைப் பிடிக்காதோர் இதைப் படித்து உங்கள் நிம்மதியைக் கெடுத்து கொள்ளாதீர்கள்.

முழுசா படிக்க பொறுமை இல்லாதவர்களுக்காக...

பதிவின் சாராம்சம் இதுதான்: மிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்லிவிட்டே ரசிகர்களுக்காக மட்டுமே படம் நடிக்கிறார் அஜித்குமார். அவருக்காக மட்டுமே அவர் படங்களைப் பார்க்கிறோம் நாங்கள். எங்கள் இருவருக்குமான உணர்வுப்பூர்வமான புரிதல் இது.

 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு நாள் முழுக்கவும் ஆட்டமிழக்காமல் ஷேவாக் நின்னு விளையாடினால் எவ்வளவு பரவசமாக பார்ப்போமோ அதை விட கூடுதலான பரவசம்தான் அஜித்குமாரை திரையில் பார்க்கும்போது!


சிட்டிசன் படம் வெளிவரும்போது தனது கேரியரின் உச்சத்தில் இருந்தார்.படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.அமர்க்களம் படம்மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக அறியப்பட்டாலும்,தீனா மிகபெரிய மாஸ் ஹீரோவாக உருவாக்கியது. அதனைத்தொடர்ந்து வந்தப்படம் என்பதால் சிட்டிசனுக்கு எதிர்பார்ப்பு எகிறியது அவருக்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கிறது என்று இன்றளவும் சொல்ல காரணமாக அமைந்தப்படம் சிட்டிசன். அப்போது அவரது வயது 30. யோசித்துப்பார்த்தால் அதற்கு அடுத்த தலைமுறை நடிகர்களில் 30 வயதைக்கடந்த எவருக்கும் அப்போதைய அஜித் கொண்டிருந்த ரசிகர்கள் பலமும், மாஸ் ஓப்பனிங்கும் இன்னும் அமையவில்லை !

2002 -இல் ரெட், ராஜா என அடுத்தடுத்த தோல்விகள். வில்லன் வெற்றிபெற்றது. ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு அடுத்த 2003 தீபாவளிக்கு வெளியான ஆஞ்சினேயாவும் தோல்வி. இடையில் கார் ரேஸில் ஈடுபாடு கொண்டு வெறித்தனமாக அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். முருகதாஸுடன் இணைந்து செய்ய வேண்டிய மிரட்டல் கைவிடப்படுகிறது. 2004-இல் வந்த ஜனா படுதோல்வி. லிங்குசாமியுடன் கைகோர்த்த ஜி படம் தள்ளி போகிறது... 

இதே காலகட்டத்தில் பகவதி, புதிய கீதை என ஃப்ளாப்கள் கொடுத்தாலும் யூத், வசீகரா, திருமலை படங்களின் மூலம் தன்னைத் தக்க வைத்துக்கொள்கிறார் விஜய். கில்லி மூலம் பட்டி தொட்டியெங்கும் சொல்லி அடிக்கிறார் விஜய். கூடவே தில், ஜெமினி, தூள், சாமி, அந்நியன் படங்களின் மூலம் விக்ரமும் போட்டிக்கு வந்து அஜித் இடத்தை பகிர்ந்துகொண்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் சூர்யாவும்! கமர்ஷியல் வெற்றி தேவை எனும் கட்டாயத்தில் இருக்கும்போது 2004 தீபாவளிக்கு அட்டகாசம் வந்து ஆறுதல் அளிக்கிறது ரசிகர்களுக்கு.நீண்டநாள் கிடப்பிலிருந்து வெளியான ஜி ரசிகர்களையே சோதித்து அனுப்பியது.காட்ஃபாதர் படம் ஆரம்பித்து நிறுத்தப்படுகிறது.நான் கடவுள் படப்பிரச்சினை.மீண்டும் கார் ரேஸ்..

 கிட்டத்தட்ட 2005 -ஆம் ஆண்டு முழுக்க அஜித் எனும் நடிகர் கோடம்பாக்கத்தில் இல்லவே இல்லை! மீடியாக்கள், பாடல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சானல்கள் கூட அஜித்குமாரை புறக்கணித்தன. அதே காலகட்டத்தில் திருப்பாச்சி, சிவகாசி என மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார் விஜய்! வீறுகொண்டு வந்து 2 படங்களை விரைவாக முடித்தார் அஜித். 2006 ஜனவரியில் வெளியான பரமசிவன் P.வாசு இயக்கம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்றியிருந்தது. தோல்வி அடையாமல் ஆவ்ரேஜாக தப்பித்தது. அடுத்து வந்த திருப்பதி விமர்சகர்களால் கழுவி ஊற்றப்பட்டாலும் வசூல் ரீதியில் கொஞ்சம் தப்பித்தது.

 வருமா? வராதா? என ஊசலாடிக்கொண்டிருந்த வரலாறு அதே ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி சரவெடியாக வெடித்தது. அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பாக எவ்வளவு கலாய்க்கப்பட்டது என்பதை ஒவ்வொரு அஜித் ரசிகனும் நன்கு அறிவான். அந்தக் காலகட்டம் அஜித் ரசிகர்கள் மறக்க நினைக்கும் கருப்பு நாட்கள்! TV-க்களில் மட்டுமே 100 நாட்களைக்கடந்து ஒளிபரப்பான ட்ரைலர் என ஃபார்வர்ட் மெசெஜ்களாக வரும். தவிர,அந்தப்படத்தில் டான்ஸர் கதாபாத்திரத்தை முன்வைத்து அவரது ஆண்மை அதிகம் கேலிபேசப்பட்டது.இன்றைய தினத்தில் ஆன்லைனில் அஜித்ரசிகர்கள் வெறித்தனமாக இயங்க முக்கிய காரணம் முந்தைய கேலி பேச்சுகள்தான் வரலாறு இடைவேளைக் காட்சியில் சிகரெட்டைப் புகைத்தவாறு மூன்றாவது அஜித் வந்து நின்றபோதும்... தன்னைக் கொலை செய்ய வரும்போது வீல் சேரில் இருந்து எழுந்து நின்ற காட்சியின் போதும் ஆர்பரித்து நிமிர்ந்த ரசிகர்கள் இன்று வரை நிமிர்ந்துகொண்டுதான் இருக்கிறோம்!

2002 தீபாவளிக்கு வெளியான வில்லன் படத்துக்குப் பிறகு 2006 தீபாவளி அன்றுதான் மிகப்பெரிய வெற்றி கிடைக்கிறது எங்களுக்கு. பசியோடு காத்திருந்த எங்களுக்கு கிடா வெட்டு விருந்தே கிடைத்தது. ஆசை தீர கொண்டாடி தீர்த்தோம். வரலாறு வெற்றிகரமாக பல அரங்குகளில் ஓடிக்கொண்டிருந்தபோதே 2007 பொங்கலுக்கு ஆழ்வார் வெளியாகி எங்களுக்கு அல்வா கொடுத்தது. Anyhow, கிரீடம், பில்லா என அடுத்தடுத்த படங்களின் எதிர்பார்ப்பு கூடியது. பாக்ஸ் ஆஃபிஸில் சொதப்பவில்லை கிரீடம். 2007 - இன் இறுதி... பில்லா வெளியாகும் சமயம். சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி என எல்லாருக்கும் விஷேச பேட்டி தந்தார் அஜித். தனது வாழ்வில் மிக முக்கியமான படமாக கருதினார் பில்லாவை! பேட்டி மூலம் அவர் வெளிப்படுத்த விரும்பிய விஷயம் ஒன்றே ஒன்றுதான். கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகளாக தனது தோல்விகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு பொறுமைகாத்த ரசிகர்களின் அன்புக்கு நன்றி! ஆளே காலி எனும் நிலையில் இருந்து இன்றைய தினம் அவர் அடைந்திருக்கும் உச்ச நிலைக்கு மிக முக்கிய காரணம் அவரது ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு மட்டுமே! கூட இருந்த பலரும் லாவகமாக விலகியபோதும், துரோகம் இழைத்தபோதும் ரசிகர் பலத்தால் மட்டுமே மீண்டு வந்தார்.

Billa
 ஒன்றை யோசித்துப் பார்ப்போம். தோல்விகளை மட்டுமே கொடுத்த நடிகன் ஒருவனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து அவனை வெற்றியாளனாக மீட்டெடுத்த ஓர் நற்காரியத்தைச் செய்துள்ளனர் அஜித் ரசிகர்கள்! பில்லா வெளியானது. ஸ்டைலிஷான மூவி மேக்கிங் என்றால் என்னவென்று இந்திய சினிமாக்களுக்கு ஒரு பாடமானது! அதற்கு முந்தைய ஆண்டு வெளியான ஷாருக்கானின் டான் படத்தின் மேக்கிங் கூட படு சாதாரணமாகவே இருக்கும். ரஜினி படத்தை ரீமேக் செய்தபோதிலும், அவரது ஸ்டைல் எதுவும் வந்து விடக்கூடாது என்று கவனமுடன் செயல்பட்டு, தனக்கான ஒரு ஸ்டைலை கண்டறிந்தார் தல. ( சமகால நடிகர்களில் பலர் அப்பட்டமாக ரஜினிகாந்தை இமிடேட் செய்வது கண் கூடு ) பில்லா மூலம் மீண்டும் ஒருமுறை தலை நிமிர்ந்த அஜித் ரசிகர்களுக்கு ஏகன் ஒரு முட்டுக்கட்டையாய் வந்தது. மீண்டும் கார் ரேஸ் ஆர்வம் துளிர்விட மறுபடியும் கேரியர் விரிசல்.2008 தீபாவளிக்குப் பிறகு,2010 ஃபிப்ரவரியில் அசல் வெளியானது.சரண் இயக்கம், இரட்டை வேடத்தில் அஜித் என பெரிய எதிர்பார்ப்புகளுடனும்,மிகப்பெரிய ஓப்பனிங்குடன் வெளியானது அசல். எதிர்பார்ப்பு பொய்த்ததால் பாக்ஸ் ஆஃபிஸில் தோற்றது கெளதம் வாசுதேவுடன் 50 -வது படம் என அறிவிப்பு வெளியாகி படம் ட்ராப் ஆனது. அசலுக்குப் பிறகும் இடைவெளி... என்ன பண்ண போகிறார் என காத்திருந்த ரசிகர்களுக்கு வெங்கட் பிரபுவுடன் மங்காத்தா என அறிவிப்பு வந்தது.

 தன்னைத் தக்க வைக்க மீண்டும் ஒரு வெற்றி அவசியம் எனும் சூழ்நிலையில், தனது கேரியரின் மிக முக்கியமான 50 -வது படம் வெளியாகும் முன்பு தனது ரசிகர் மன்றங்களை அதிகாரப்பூர்வமாக கலைத்து விட்டார். மன்றங்கள் மூலம் சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றனர் என்பதே முக்கிய காரணம் ! தனது ரசிகர்கள் எவரும், தனது பெயரை முன்னிறுத்தி அரசியல் செய்யக்கூடாது ( அல்லது ) அரசியலில் ஏமாறக்கூடாது என்பதே அவர் விருப்பம்."நான் ஒரு நடிகன். எனது தொழில் சினிமாவில் நடிப்பது. அதை நான் செய்கிறேன். எனது படம் வெளியாகும் போது திரையரங்கிற்கு வந்து படத்தைப் பாருங்கள். பிடித்தால் ரசியுங்கள். கொண்டாடுங்கள்.பிடிக்காவிட்டால் அடுத்தப்படத்தை உங்களுக்கு பிடிக்கும்படி பார்த்துக்கொள்கிறேன்.இதுதான் நம் இருவருக்குமான தொடர்பு.மற்ற முழுநேரமும், உங்கள் குடும்பத்துக்காகவும்,உங்கள் தொழிலுக்காவும் செலவிடுங்கள்.நீங்களும் வாழுங்கள். மற்றவர்களையும் வாழவிடுங்கள்!"  2011 -ஆம் ஆண்டு அஜித்குமார் தனது ரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள் இது.  ஒரு நடிகனாக எவ்வளவு மெச்சூர்டான ஸ்டேட்மெண்ட் இது? அவர் நடிக்கிறார். அவரை எங்களுக்குப் பிடிக்கும். நாங்கள் அதைக் கொண்டாடுகிறோம். அவ்ளோதான். சிம்பிள்.

 ஆர்பாட்டமின்றி தமிழக இளைஞர்களிடம் ஒரு கலாச்சார மாற்றத்தை செய்துகொண்டிருக்கிறார் அஜித். ஆண்களும் சமைக்க வேண்டும். குடும்பத்தினருக்கு உரிய அன்பையும், நேரத்தையும் செலவிட வேண்டும். சக மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். யாரையும் தரக்குறைவாக நடத்தக்கூடாது. வரிசையில் நிற்க வேண்டும். தவறாமல் வாக்களிக்க வேண்டும். ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் வாழ்க்கையை அணுக வேண்டும். தோல்வியில் துவண்டு விட கூடாது. மனதில் சரி என தோன்றுவதை வெளிப்படையாக பேச வேண்டும். பெண்களை கண்ணியமாக நடத்த வேண்டும். மூத்தோர்களை மதிக்க வேண்டும். மிக மிக முக்கியமாக... நன்றாக படிக்க வேண்டும். கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும். நாம் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விட வேண்டும்!
 ஒவ்வொரு அஜித் ரசிகனுக்குள்ளும் இவை ஆழமாக பதிந்துள்ளன. அடுத்த தலைமுறையில் இக்கலாச்சார மாற்றத்தின் விதையை நிச்சயம் அறுவடை செய்வோம் நாம்! இவை மட்டுமின்றி, தனது படங்களில் தவறான முன்னுதாரணங்கள் எவற்றையும் சொல்வதில்லை அஜித். வேதாளம் படத்தில் பெண்களுக்கான முன்னுரிமை, ஒரு ஆண் அவளுக்கு கொடுக்க வேண்டிய சுதந்திரம், என்னை அறிந்தால் படத்திலும் ஒரு ஆண்மகன் பெண்ணை அணுக வேண்டிய விதம், வீரம் படத்தில் தன்னைச் சுற்றி இருப்போரிடத்தில் நாம் செலுத்த வேண்டிய அன்பு, தான் நேசிக்கும் பெண்ணிடம் காண்பிக்க வேண்டிய கண்ணியம் என சில மெளனமான போதனைகளும் உண்டு.
 பெண்களின் புட்டத்தை அமுக்குவது,அதன் மீது பந்து எறிவது,மார்புடன் மார்பு முட்டி கிளுகிளுப்பு உண்டாக்குவது, தெரியாத்தனமாக மார்பை அமுக்குவது, கேலிக்கும் கிண்டலுக்கும் பெண்ணை ஆளாக்கி தன் பின்னால் அலைய விடுவது... இதுபோல் சமகால ஹீரோக்கள் செய்யும் எதையும் செய்வதில்லை அஜித்.
 note : சமகால மங்காத்தாவில் மட்டும்,ஏற்று நடித்த நெகடிவ் Role காரணமாக விலைமாது கேரக்டரில் நடித்த பெண்ணை தகாதவார்த்தையால் திட்டுவார்.சுயலாபத்துக்காக ஒரு பெண்ணை காதலிப்பதுபோல நடித்து ஏமாற்றுவார். இதைத்தவிர,கடந்த பல ஆண்டுகளாகவே வேறெந்தப்படத்திலும் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் அறவே கிடையாது ! இதைவிட ஒரு நடிகன் தனது ரசிகர்களுக்காக என்னத்த செய்ய முடியும்?

உங்க முதலீடு வெறும் ₹2,250 தான். மூன்றே மாதங்களில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே பதிவு செய்து கொள்ளவும்

Invest just ₹2,250 and earn in millions. For more details click here to register.

Comments

Thala Ajith Fans Club

Popular posts from this blog

Celebrities at Srikanth's son wedding stills

                                    The wedding reception of cricketerKrishnamachari Srikkanth son Anirudha Srikanth was held in a grand manner in Chennai. DMK Supremo M Karunanidhi, AR Rahman, Ajith & Shalini with baby Anushka, Cho Ramaswamy, Bala, Jeeva, SA Chandrasekhar, Radha Mohan, Stalin, Uday, Preetha, Nassar graced the occasion.  

Asal Audio Launch Exclusive Photo Gallery

Asal Audio Launch was held in Annai Illam as a very Low profile event.Many Celebrities including AjithKumar, Shalini AjithKumar, Prabhu, Ramkumar, Director Saran, Music Director Bharadwaj, Prabhu, Ramkumar were present.

Asal mp3 songs free download | download ajith asal Audio songs

Cast : Ajith Kumar as Shiva , Prabhu as Mirasi, Sameera Reddy as Sara, Bhavana as Sulaba, Yugi Sethu as Don Samosa, Suresh as Daniel Dharmaraj, Rajiv Krishna as Vicky, Surendra Pal, Suhasini Mani Ratnam , Sampath Raj as Sam, Adithya, Pradeep Rawat as Kalivardhan, Karmanya, Kelly Dorji as Shetty, Karen Miao Sapru, Koena Mitra in an item number Label - ANAK Audio, Think Music Direction: Saran Story, Screenplay : Yugi Sethu Music: Bharathwaj and Y-Kinz Dialogues : Yugi Sethu Production: Sivaji Productions Cinematography: Prashanth D.Misale an Assistant to Nirav Shah Editing: Anthony Gonsalves Art direction: Virumaandi fame Prabakar Choreography: Ganesh Acharya, Raju Sundaram Stunts: William Ong, Kanal Kannan, Thalapathi Dinesh, Patrick Bruneton Lyrics: Vairamuthu Costume design: Vivek Karunakaran (Ajitkumar), Rangasamy, Nalini Sriram (Sameera Reddy & Bhavana) Stills: Sittrarasu Production manager: Ramkumar Ganesan, Prabhu Ganesan Executive producer: S Anand , Devar Murugan, Ravi Mara