திரு. கணேசன் அன்பு என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்குமாரும் அவரது ரசிகர்களும் - நிகழ்ந்த அற்புதம்! என்ற தலைப்பில் ஒரு கருத்தை, உள்ளது உள்ளபடி பதிவிட்டிருந்தார் . அது உங்கள் பார்வைக்காக. அஜித்குமாரும் அவரது ரசிகர்களும் - நிகழ்ந்த அற்புதம்! அஜித்குமார் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் (நல்ல) சினிமா விரும்பிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான விளக்க பதிவு. எங்களைப் பிடிக்காதோர் இதைப் படித்து உங்கள் நிம்மதியைக் கெடுத்து கொள்ளாதீர்கள். முழுசா படிக்க பொறுமை இல்லாதவர்களுக்காக... பதிவின் சாராம்சம் இதுதான்: மிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்லிவிட்டே ரசிகர்களுக்காக மட்டுமே படம் நடிக்கிறார் அஜித்குமார். அவருக்காக மட்டுமே அவர் படங்களைப் பார்க்கிறோம் நாங்கள். எங்கள் இருவருக்குமான உணர்வுப்பூர்வமான புரிதல் இது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு நாள் முழுக்கவும் ஆட்டமிழக்காமல் ஷேவாக் நின்னு விளையாடினால் எவ்வளவு பரவசமாக பார்ப்போமோ அதை விட கூடுதலான பரவசம்தான் அஜித்குமாரை திரையில் பார்க்கும்போது! சிட்டிசன் படம் வெளிவரும்போது தனது க...
Ajith Kumar Gallery | News | stills | images | clips